2021 மார்ச் 03, புதன்கிழமை

அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

Super User   / 2010 ஒக்டோபர் 10 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார், எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் அம்பாறை மாவட்ட செயலகத்தில் இன்று காலை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில்ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுவின்  தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, அமைச்சர்களான ஏ.எல்.எம்.அதாவுல்லா, பீ. தயாரட்ன, றிசாட் பதியுதீன், சுசில் பிரேமஜயந்த, நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம், கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்ரம,  கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண அமைச்சர்களான எம்.எஸ்.எம்.சுபையிர், எம்.எஸ்.எம்.உதுமா லெவ்வை, விமலவீர திசாநாயக்க மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.எம்.ஜவாத், ஏ.எம்.ஜெமீல், கலபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அத்துடன் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கரா, உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், மாகாண மற்றும் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், இராணுவ உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தின் போது அம்பாறை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் அதன் முன்னேற்றங்கள் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் விளக்கிக் கூறினார்.
 
இதையடுத்து கமநெகும, பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம், சமுர்த்தி அபிவிருத்தித் திட்டம் போன்ற கருத்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு, நீர்ப்பாசனம், விவசாயம், மீன்பிடி, கால்நடை, வீதி, நீர்விநியோகம், வீடமைப்பு, மின்சாரம், கைத்தொழில், சுகாதாரம், கல்வி, சுற்றுலாத்துறை அபிவிருத்தி, இளைஞர் அபிவிருத்தி, வனவிலங்குப் பாதுகாப்பு போன்ற திட்டங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

நடைபெற்றுக் கொண்டிருக்கும் கரவாகு கால்வாய்த் திட்டம், ஒலுவில் துறைமுகத் திட்டம், றம்புக்கன் நீர்ப்பாசனத் திட்டம், கல்லோயா நவோதாயத் திட்டம், சமூக நீர் வினியோகத் திட்டம், மீள்எழுச்சித் திட்டம், நெக்டெப் திட்டம், உலக உணவுத் திட்டம் போன்றவற்றின் முன்னேற்றங்கள் பற்றியும் இங்கு ஆராயப்பட்டது.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .