Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 11 , மு.ப. 02:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எல்.தேவ்)
மிக விரைவில் அதி நவீன கண் சத்திர சிகிச்சைப் பிரிவு ஒன்று கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் திறந்து வைக்கப்படவுள்ளது.
இதற்கான கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்கடர் சாமித்தம்பி இராஜேந்திரனின் பெரும் முயற்சியால் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன பல இலட்சம் ரூபாய் பெறுமதியான கண் சத்திர சிகிச்சை உபகரணங்களை வழங்கியிருந்தார்.
அத்துடன், பல வைத்தியசாலை உபகரணங்களும் இவ்வைத்தியசாலைக்கு வழங்கப்படவுள்ளன.
இவ்வைத்தியசாலைக்கு கண் சத்திர சிகிச்சைக்கான சிலிப் பல்புகள், கண்சத்திர சிகிச்சை மேசைகள் கிடைத்துள்ளன. இன்னும் ஒரு சில வாரங்களில் இப்பிரிவு திறந்து வைக்கப்படும் என வைத்தியசாலையின் உதவி வைத்திய அத்தியட்சகர் டாக்டர் திரிசுதன் தெரிவித்தார்.
இப்பிரிவு திறக்கப்படுவதன் மூலம் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் மாத்திரமன்றி வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் கண்சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் சந்திரகுமாரின் சிகிச்சை மூலம் பயன் பெறுவர் என்றும் அவர் தெரிவித்தார்.
37 minute ago
56 minute ago
2 hours ago
jazny Monday, 11 October 2010 11:08 PM
onrumillei ennei pathivu seiungel
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
56 minute ago
2 hours ago