Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Kogilavani / 2010 ஒக்டோபர் 20 , மு.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எல்.அப்துல் அஸீஸ்)
கல்முனை பிராந்திய மனித உரிமை ஆணைக்குழுவினால் அமைக்கப்பட்ட பிராந்திய மட்ட வலையமைப்பின் விசேட கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை கல்முனை மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் இடம் பெற்றது.
இதன்போது இப்பிரதேசத்தில் இடம் பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டது.
கல்முனை பிராந்திய மனித உரிமை ஆணைக்குழுவின் இணைப்பாளர் எம்.எம்.சாறூக் தலைமையில் இடம் பெற்ற இக் கூட்டத்தில் மூன்று விசேட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
01 .சிறுவர் துஷ்பிரயோகங்கள் மேற்கொள்ளும் நபர்கள் சட்டத்திலிருந்து தப்பிக்காதிருப்பதற்கான வழிவகைகள் தொடர்பாக ஆலோசிப்பதற்காக நவம்பர் மாதம் இப்பிராந்தியத்திலுள்ள நீதிபதிகள், சட்டத்தரணிகளை அழைத்து கலந்துரையாடல் அமர்வு ஒன்றினை நடத்துதல்.
02. டிசம்பர் மாதம் பத்தாம் திகதி அனுஷ்டிக்கப்படவிருக்கும் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு விழா ஒன்றினை நடத்துதல், இவ் விழாவில் இப்பிராந்தியத்தில் மூன்று வருடங்கள் நிகழ்ந்த சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பான கையேடு ஒன்றை வெளியிடுதல்.
03. பாடசாலை மட்டத்திலுள்ள மாணவர்களுக்கு நாட்டில் இடம் பெறும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான அறிவுரைகள் அடங்கிய நூல் ஒன்றினை அச்சிட்டு விநியோகித்தல்.
போன்ற தீர்மானங்களே இக்கூட்டத்தின் போது நிறைவேற்றப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago