Super User / 2010 ஒக்டோபர் 22 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவின் அறிவுறுத்தலுக்கிணங்க, கல்முனைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிரான் பெரேராவின் உத்தரவின் பேரில் கல்முனைப் பொலிஸார் கடந்த சில நாட்களாக போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக அந்நிலையத்தின் குற்றப்பிரிவுப் பொலிஸார் தெரிவித்தனர்.
கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது, கல்முனை, பாண்டிருப்பு, மருதமுனை உள்ளிட்ட பல இடங்களில் தாம் நடத்திய தேடுதலின் போது, போதைப் பொருள் நடவடிக்கையோடு தொடர்புபட்ட பலர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் கூறினர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் வரி செலுத்தப்படாத சிகரட் உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருட்களை பொலிஸார் கைப்பற்றியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மேற்படி போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து இடம்பெறுமெனவும் கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.
4 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
6 hours ago