Super User / 2010 ஒக்டோபர் 23 , பி.ப. 01:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஹனீக் அகமட்)
மருதமுனை சத்தார் எம். பிர்தௌஸ் எழுதிய 'நிலைமாற்று முகவர் கற்றலும் கற்பித்தலும்' எனும் தலைப்பிலான நூல் வெளியீட்டு வைபவம் நேற்று வெள்ளிக்கிழமை மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.
அல் மனார் மத்திய கல்லூரி அதிபர் எஸ்.எம்.எம்.எஸ். உமர் மௌலானா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எம். நிஸாம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
மேற்படி நிகழ்வில், கல்முனைப் பிராந்திய காணிப் பதிவாளரும், மேலதிக மாவட்ட பதிவாளருமான முசத்தீன் ஜே முஹம்மட் நூலுக்கான அறிமுகவுரையை வழங்கினார்.
நூலின் விமர்சனவுரையை கல்முனை பிரதி வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். ஜலீல் வழங்கினார்.
வெளியீட்டு விழாவில், நூலின் முதற்பிரதியினை மாகாணக் கல்விப் பணப்பாளர் நிஸாமிடமிருந்து ரெமி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் இஸற்.ஏ.எச். ரஹ்மான் பெற்றுக் கொண்டார்.
.jpg)
.jpg)
30 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
44 minute ago