Janu / 2026 ஜனவரி 26 , பி.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
டிட்வா சூறாவளியால் சேதமடைந்த மதத் தலங்களை, சமய வழிபாடுகளுக்கு ஏற்ற வகையில் விரைவாக புனர்நிர்மாணம் செய்வதற்காக அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் 'கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்' தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் செவ்வாய்க்கிழமை (27) அன்று நடைபெறவுள்ளது.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் கம்பளை, தொரகல, பீகொக் ஹில் குடியிருப்பின் ஸ்ரீ போதிருக்காராம விஹாரையில் முற்பகல் 10.00 மணிக்கும் மாத்தளை, கவடயாமுன புராண ரஜமஹா விஹாரையில் பிற்பகல் 3.00 மணிக்கு ம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அனர்த்தத்தைத் தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மத, கலாசார மற்றும் தொல்பொருள் தலங்கள் சேதமடைந்தன. அந்த இடங்களில் தேவையான புனரமைப்புப் பணிகளை உடனடியாகத் தொடங்கி அவற்றை முன்னர் இருந்த நிலைக்கு மீளக் கட்டியெழுப்புவதற்கான அனைத்து புனரமைப்புப் பணிகளையும், குறித்த இடங்களின் தொல்லியல் பெறுமதியைப் பாதுகாக்கும் வகையில் மகா சங்கத்தினர் உட்பட ஏனைய மதத் தலைவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ள அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது,

51 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
2 hours ago
2 hours ago