2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

தாதியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

Super User   / 2010 ஒக்டோபர் 25 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

தாதி உத்தியோகத்தர்கள் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து இன்று கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் பணிப் பகிஷ்கரிப்பு நடவடிக்கையொன்றில் ஈடுபட்டனர்.

அரச தாதி உத்தியோகத்தர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 8.00 மணி முதல் 11.00 மணி வரை இடம்பெற்ற இந்த பணிப் பகிஷ்கரிப்பில் தமது கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு தாதியர்கள் பங்குபற்றினர்.

தாதி உத்தியோகத்தர்களின் 12 வருட சேவைக் காலத்தில் முதலாம் தரத்தை வழங்குதல் வேண்டும், வேலை நாட்கள் 06 ஆக இருப்பதை 05 ஆக குறைத்தல் வேண்டும், பயிற்சிக் காலத்தை மூன்றரை வருடங்களாக்குதல் வேண்டும், தமக்கான மேலதிக சம்பளக் கணிப்பில் 40 மணித்தியாலங்களால் பிரிப்பதை 180 ஆல் பிரித்தல் வேண்டும், தாதியர் யாப்புத் திருத்தத்தை உடனடியாக வெளியிட வேண்டும் - ஆகிய ஐந்து கோரிக்கைகளை முன்வைத்தே இந்த பணிப் பகிஷ்கரிப்பில் தாதி உத்தியோகத்தர்கள் ஈடுபட்டனர்.

இது போன்ற பணிப்பகிஷ்கரிப்பு இன்றைய தினம் நாடு முழுவதும் இடம்பெற்றதாக, அரச தாதி உத்தியோகத்தர் சங்கத்தின் பிரதித் தலைவரும், சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளருமான பி.எம். நசிறுத்தீன் தெரிவித்தார்.


 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--