2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

பல்துறை சாதனையாளர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு

Super User   / 2010 ஒக்டோபர் 25 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

மருதமுனை 'கோல்ட் மைன்ட்' விளையாட்டுக் கழகத்தின் 35ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் முகமாக, மருதமுனைப் பிரதேசத்திலுள்ள பல்துறை சாதனையாளர்களை கௌரவிக்கும் வைபவமொன்று கழகத் தலைவர் வை.கே.ரஹ்மானின் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை  மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.

இவ்வைபவத்தில் உள்லூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல். துர்கர் நயீம் விசேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

இதன்போது 2007, 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவான 170 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் குறித்த ஆண்டுகளில் க.பொ.த சாதாரண தரம் மற்றும் 05ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை ஆகியவைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 10 மாணவர்களும் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.

மேலும், கோல்ட் மைன்ட் கழக போசகர்கள் ஐவர், சமூக சேவையாளர்கள் 04 பேர், ஆசிரிய சேவையைச் சேர்ந்த இருவர், கல்வி நிருவாக சேவையைச் சேர்ந்த ஒருவர், நிருவாக சேவையைச் சேர்ந்த ஒருவர் மற்றும் கணக்காளர் சேவையினைச் சேர்ந்த மூவர் என சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். இதன்போது 'பொன் மனம்' எனும் சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது.



 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X