2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு மருதமுனை அல் - மதீனா வித்தியாலயத்தில் நூலக சேவை

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 28 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

தேசிய வாசிப்பு மாதத்தினையொட்டி, மருதமுனை அல் - மதீனா வித்தியாலயத்தில் நூலக சேவையினை ஆரம்பித்து வைக்கும் வைபவம் வித்தியால அதிபர் ஏ.ஆர். நிமதுல்லா தலைமையில் இன்று காலை நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கல்முனை பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். அப்துல் ஜலீல், கௌரவ அதிதியாக கோட்டக் கல்விப் பணிப்பாளர் எச்.எம்.ஏ. வதூத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது, வாசிப்பு மாதத்தினையொட்டி மாணவர்களிடையே நடத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டதோடு, மாணவத் தலைவர்களுக்கான அடையாள அட்டைகளும் வழங்கி வைக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--