S.Renuka / 2026 ஜனவரி 11 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

படத்தின் முதல் பாதி கஷ்டமாக இருக்கும், ஆனால் 2ஆவது பாதி அவர் இல்லாமல் இல்லை என்று பராசக்தி படத்தில் ஜெயம் ரவியின் நடிப்பை புகழ்ந்து கெனிஷா பேட்டி அளித்துள்ளார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் நடிப்பில் பொங்கல் வெளியீடாக இன்ற ரிலீஸ் ஆன படம் பராசக்தி.
ரிலிஸ்க்கு முதல்நாள் வரை சென்சார் பிரச்சினையில் சிக்கிய இந்த படம் ஒரு வழியாக திட்டமிட்டபடி வெளியாகியுள்ளது.
ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமான வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தில், முதல் முறையாக நடிகர் ரவி மோகன் வில்லன் கேரக்டரில் நடித்துள்ளார்.
படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம், ரவி மோகன் வில்லனாக எப்படி நடித்திருக்கிறார் என்பது குறித்து பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
இன்று படம் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில், ரவி மோகனின் வில்லத்தனத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இதனிடையே இந்த படத்தை சென்னை காசி தியேட்டரில் ரசிகர்களோடு சேர்ந்து பார்த்த ரவி மோகனின் தோழி கெனிஷா, செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.
இதில் ரவி மோகன் வில்லனா பண்ணா என்ன? ஹீரோவா பண்ணா என்ன? அவரால் தான் இந்த படமே ஓடும். என் கண்ணுக்கு அவர் மட்டும் தான் தெரிகிறா. வேற யாரும் தெரியவில்லை.
இந்த கேரக்டரில் நடிக்க கடந்த 6 மாதமாக அவர் மிகவும் கஷ்டப்பட்டார் என்பது எனக்கு நன்றாக தெரியும். ஆனால், இந்த படத்தை பார்க்கும் போது அவருக்காக தான் இந்த படத்தையே எடுத்து இருக்கிறார்கள் என எனக்கு தோன்றுகிறது.
அவர் ஹீரோவாக நடித்தாலும் வில்லனாக நடித்தாலும் எவர்கிரீன், அவர் தான் பெஸ்ட். ரவி தான் இந்த படத்தில் நம்பர் ஒன் ஆக இருக்கிறார்.
இத்தனை நாட்களாக ரவியை ஒரு ஹீரோவாக பார்த்துவிட்டு நெகட்டிவ் ரோலில் பார்த்ததால் ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும், ஆனால், படத்தின் 2ஆவது பாதியில் ரவியை பார்க்கும் போது அவரைத் தாண்டி எதுவுமே இல்லை என்ற எண்ணம் வந்து விடும்.
சென்சார் சான்றிதழ் குறித்து பேசிய கெனிஷா, அரசின் சட்ட திட்டங்களை நான் நம்புகிறேன்.
அதற்கு எதிராக யாரும் எதையும் செய்ய முடியாது. சென்சார் போர்டு தனது கடமையை செய்கிறது. ஒருவழியாக அனைத்து பிரச்சினைகளும் முடிந்து படம் வெளிவந்து உள்ளது. படத்தை மக்கள் ரசித்து பார்த்து கொண்டாடுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து ஜன நாயகன் குறித்து பேசிய கெனிஷா, ஏற்கெனவே ரவி தனது வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார்.
அவர் சொன்னது போல, ஜனநாயகன் படம் என்னைக்கு வெளியாகிறதோ அன்னைக்கு தான் பொங்கல், எனக்கும் அப்படித்தான் என கூறியுள்ளார்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago