Editorial / 2026 ஜனவரி 11 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

பூ.லின்ரன்
யாழ்ப்பாணம் - அரியாலை 13ஆம் கட்டை பகுதியில் சனிக்கிழமை (10) இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் ஞாயிற்றுக்கிழமை (11) உயிரிழந்துள்ளார்.
முத்தமிழ் வீதி, கொட்டடி பகுதியைச் சேர்ந்த சிவராஜா சிவலக்சன் (வயது 23) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி புகையிரதத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியே இந்த விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவை காணப்படுகிறது.
விபத்தில் காயமடைந்த இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago