2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

மின்னல் தாக்கி ஒருவர் பலி

Super User   / 2010 ஒக்டோபர் 28 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி, தீவு வட்டை பகுதியில் மின்னல் தாக்குதலுக்குள்ளாகி  குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இளைஞர் ஒருவர் அதிர்ச்சியடைந்து சம்மாந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று வியாழக்கிழமை பிற்பகல் 2.45 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் சம்மாந்துறை கைகாட்டி மல் 15ஆம் வீதியில் வசித்து வரும் ஆதம்லெப்பை மஹ்றூப் (48) எனும் மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். அத்துடன் அவரின் மருமகனான அசனார் ஆஷீக் (17) எனும் இளைஞன் அதிர்ச்சியடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மழைக்கு மத்தியில் மாவடிப்பள்ளியிலிருந்து தீவு வட்டை நோக்கி இவ்விருவரும் மாடுகளை மேய்த்துக் கொண்டு செல்லும் போது மின்னல் தாக்கியே மேற்படி குடும்பஸ்தர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

 


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .