2020 நவம்பர் 28, சனிக்கிழமை

'விவசாயத் திணைக்கள உத்தியோகஸ்தர்களின் அறிவுரைகளை பின்பற்றாமையே பயிர்கள் அழிவடைந்தமைக்கு காரணம்'

Super User   / 2010 நவம்பர் 01 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

விவசாயத் திணைக்கள உத்தியோகஸ்தர்களின் அறிவுரைகளை பின்பற்றாமையே இம்முறை பெரும்போக நெற்செய்கையின் போது, விவசாயிகள் பலரின் பயிர்கள் நீரின்றி அழிவடைந்தமைக்கு பிரதான காரணமாகும் என பாலமுனை விவசாய விசாலிப்புத் திணைக்கள விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.அஷ்ரப் தெரிவித்தார்.

இம்முறை பெரும்போக நெற்செய்கையின் பொருட்டு விவசாயிகள் ஒக்டோபர் 15ஆம் திகதிக்கும் நவம்பர் 15ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதிக்குள் விதைப்பு நடவடிக்கையில் ஈடுபடுமாறு அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கு தாம் அறிவுறுத்தல் வழங்கியிருந்த போதும், அதை அதிகமான விவசாயிகள் பின்பற்றவில்லை.

இதனாலேயே பலர் விதைத்த நெல்கள் நீரின்றி அழிந்து போகும் நிலை உருவாகியுள்ளது. விவசாய உத்தியோகத்தர்களின் அறிவுரையைப் பின்பற்றியிருந்தால் இவ்வாறான கைசேதம் ஏற்பட்டிருக்காது என்று அவர் மேலும் கூறினார்.

அம்பாறை மாவட்டத்தில் நெற்செய்கையில் ஈடுபடும் அதிகமான விவசாயிகள், விதைப்புக்கான காலம் தொடர்பில் விவசாய உத்தியோகத்தர்கள் வழங்கியிருந்த அறிவுரைபையப் பின்பற்றாமல், குறித்த காலத்துக்கு முன்பு விதைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார்கள்.

இதனால், விதைக்கப்பட்ட நெல் விதைகள் நீரின்றி பழுதடைந்துள்ளதோடு, எறும்பு மற்றும் கறையான் போன்றவற்றினாலும் சேதமாகியுள்ளன.

இதன் காரணமாக, இரண்டாவது முறையும் விதைக்க வேண்டிய நிலை பல விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. எவ்வாறிருந்தபோதும், சில விவசாயிகள் விவசாய உத்தியோகத்தர்களின் அறிவுரையைப் பின்பற்றி அம்பாறை மாவட்டத்தில் தற்போது விதைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.


 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--