2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

மருதமுனைப் பிரதேசத்தில் போதைப் பொருள் கைப்பற்றல்

Super User   / 2010 நவம்பர் 05 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

மருதமுனைப் பிரதேசத்தில் கல்முனை பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை காலை மேற்கொண்ட திடீர் சோதனையின் போது, கஞ்சா கலக்கப்பட்ட லேகியம் மற்றும் போதைப் பொருள் ஒரு தொகையினை கைப்பற்றியதாக கல்முனைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிரான் பெரேரா தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் எடை 02 கிலோ 855 கிராமாகும்.

கல்முனை  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரான் பெரேராவின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந் நடவடிக்கையின் போது, பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் பலர் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .