2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

மருதமுனையில் போதைப்பொருள் உற்பத்தி தொழிற்சாலை முற்றுகை

Super User   / 2010 நவம்பர் 07 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

(எஸ்.எல்.அப்துல் அஸீஸ்)

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமுனை பிரதேசத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த போதைப்பொருள் உற்பத்தி தொழிற்சாலையொன்றை  கல்முனை பொலிஸார் நேற்று சனிக்கிழமை முற்றுகையிட்டுள்ளனர்.

இந்த போதைப்பொருள் உற்பத்தி தொழிற்சாலை கடந்த 9 வருடங்களாக மருதமுனையில் இயங்கி வந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது .

கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரான் பெரேராவின் பணிப்பின் பேரில்  பொலிஸ்  பரிசோதகர் எஸ்.ஜே.ஜீவரத்ன தலைமையிலான 12 பேர் கொண்ட பொலிஸ் குழுவினரே போதைப்பொருள் தொழிற்சாலையை முற்றுகையிட்டுள்ளனர்.

இம்முற்றுகையின்போது சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன்  14 கிலோ கிராம் கஞ்சா தூள், 1500 கிராம் லேகியம் மற்றும் போதைப்பொருள் உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்ட பொருட்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன. 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .