2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

வடக்கு, கிழக்கு மாணவர்களுக்கு பயிற்சி பாசறை

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 10 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி பாசறையொன்று துல்கிரிய மார்ஸ் நிலையத்தில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா யுனைட்ஸ் நிறுவனம் கல்வியமைச்சுடன் இணைந்து முன்னெடுத்துச் செல்லும் இத்திட்டத்தில் மாணவர்களுக்கு உளவளம், விளையாட்டு, கலாசாரம் மற்றும் தமைமைத்துவம் போன்றவற்றில் சிறப்பான பயிற்சிகள் வழங்கப்பட்டன.

கடந்தகால யுத்த சூழ்நிலையால் மன அழுத்தங்களுக்கு உட்பட்டிருந்த வட கிழக்கு பாடசாலை மாணவர்களுக்கு இத்தலைமைத்துவ பயிற்சிநெறி மிகவும் பிரயோசனமாக அமைந்ததாகவும் சகல இன மாணவர்களிடையேயும் பரஸ்பர புரிந்துணர்வும் மொழித்தேர்ச்சியும் ஏற்பட்டதாகவும் இத்தலைமைத்துவ பாசறையில் கலந்துகொண்ட கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவன் பிர்னாஸ் ஜப்றான் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .