2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பு

Kogilavani   / 2010 நவம்பர் 11 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர் )

அம்பாறை மாவட்டத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 100 க்கும் அதிகமான புள்ளிகளை பெற்ற 3020 மாணவர்களுக்கு மனித அபிவிருத்தித் தாபனம் நடாத்தும் பாராட்டு விழாத்தொடரின் முதலாவது நிகழ்வு நேற்று ஆலையடிவேம்பு இந்து கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

அங்கு அகில இலங்கை ரீதியில் தமிழ்மொழி மூலம் முதலிடம்பெற்ற தம்மிலுவில் கலைமகள் வித்தியாலய  மாணவி மாலவன் சுபதா பாராட்டப்பட்டார்.

இந்நிகழல்வில்,  பிரதம அதிதியான கிழக்கு மாகாண கல்வியமைச்சின் பிரதிச் செயலாளர் எஸ்.தண்டாயுதபாணி மற்றும் சுபதா ஆகியோர் உரையாற்றினார்.

மனித தாபன தலைவர் பி.பி.சிவப்பிரகாசத்தின் பாரிய கல்விப் பணியினைப்பாராட்டி பிரதிச் செயலாளர் எஸ்.தண்டாயுதபாணி வித்ய சாஹித்ய சூரி எனும் பட்டத்தைவழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--