2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

உணவுப் பொருள் கொள்வனவில் வாடிக்கையாளர்களும் கவனம் செலுத்தல் வேண்டும்

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 11 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

உணவுப் பொருட்களை விற்பனை செய்கின்றவர் மட்டுமன்றி கொள்வனவு செய்பவர்களும் அவற்றின் தரம், காலாவதியாகும் திகதி மற்றும் சுட்டுத்துண்டு உள்ளிட்ட விடயங்களில் கவனம் செலுத்துதல் வேண்டும். நசுங்கி அல்லது நெளிவடைந்த நிலையிலுள்ள மீன் ரின்கள் மற்றும் பச்சை நிறமாக மாறிய உருழைக் கிழங்கு போன்றவைளை விற்கவோ கொள்வனவு செய்யவோ வேண்டாம். நெளிவடைந்த அல்லது நசுங்கிய ரின்களுக்குள் இருக்கும் பதப்படுத்தப்பட்ட மீன்களும், பச்சை நிறமாக மாறிய உருளைக் கிழங்கும் மனித சுகாதாரத்துக்கு மிக மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடியவை' என்று அட்டாளைச்சேனை பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினைச் சேர்ந்த மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எம்.ஏ. ஜவ்வர் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி காரியலாயலத்தைச் சேர்ந்த பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நேற்று புதன்கிழமை அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள உணவகங்கள் மற்றும் உணவு விற்பனை நிலையங்களில் திடீர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அதன்போது, சோதனை செய்யப்பட்ட விற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் அங்கு கூடி நின்ற பொதுமக்கள் மத்தியில் விளக்கமளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

'உணவுப் பொருட்களை விற்பனை செய்கின்றவர் மட்டுமன்றி கொள்வனவு செய்பவர்களும் அவற்றின் தரம், காலாவதியாகும் திகதி உள்ளிட்ட விடயங்களில் கவனம் செலுத்துதல் வேண்டும்.

நெளிவடைந்த ரின் மீன்கள், பச்சை நிறமாக மாற்றமடைந்த உருளைக்கிழங்கு மற்றும் சுட்டுத் துண்டுகள் இல்லாமல் பொதியிடப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்யவோ, கொள்வனவு செய்யவோ வேண்டாம்.

காலாவதியான பொருட்களை விற்பனை நிலையங்களில் வைத்திருக்கநேரும்போது, அவற்றினை வேறுபடுத்தி – அவை விற்பனைக்கானவையல்ல என்பதை எழுதி வைக்க வேண்டும்' என்றார்.

மேற்படி, திடீர் சோதனை நடவடிக்கையின்போது பயன்படுத்தமுடியாத நிலையில் இருந்த பல்வேறு உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதோடு, அவற்றினை தம்வசம் வைத்திருந்த வியாபாரிகள் கடுமையான எச்சரிக்கையின் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

அட்டாளைச்சேனை பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தைச் சேர்ந்த மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எம்.ஏ. ஜவ்வர் தலைமையிலான இந்த நடவடிக்கையில் பொதுச் சுகாதார பரிசோதகர்களான எஸ்.ரி. கலீலுல் ரகுமான், எஸ். சம்ஸடீன், ஏ.எம். ஜஸீல் ஆகியோரும் பங்குகொண்டனர்.

இந்நடவடிக்கைக்கு, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொலிஸ் பரிசோதகர் சலாம் தலைமையிலான பொலிஸ் குழுவினர் ஒத்துழைப்பு வழங்கினார்கள்.

அம்பாறை மாவட்டடத்தின் பல பகுதிகளிலும் இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் நேற்று புதன்கிழமை ஒரே நேரத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .