Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 நவம்பர் 14 , பி.ப. 01:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
தேசிய வாசிப்பு மாதத்தினையொட்டி மருதமுனை பொதுநூலகத்தினர், மருதமுனை பாடசாலை மாணவர்களிடையே நடத்திய கவிதை மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை, மருதமுனை பொதுநூலக கேட்போர் மண்டபத்தில் நடைபெற்றது.
கல்முனை மாநகரசபை நிர்வாக உத்தியோகத்தர் எம்.ஏ.எம்.அலாவுத்தீன் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில், கல்முனை மாநகரசபை முதல்வர் இஸற்.எம். மசூர் மௌலானா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
கல்முனை பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.சி.எம். தௌபீக், ஆசியா மன்றத்தின் நிகழ்ச்சித்திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத், மருதமுனை வாசகர் வட்டத் தலைவர் றஸ்மி மூஸா மற்றும் ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ. காதர் ஆகியோர் இப்பரிசளிப்பு வைபவத்தில் அதிதிகளாக கலந்துகொண்டனர்.
போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிரதம அதிதி மற்றும் அதிதிகள் பரிசுகளை வழங்கி வைத்தனர்.
மேற்படி வைபவத்தினை நூலகர்களான ஏ.ஏம்.பாத்திமா, ஹரீஸா சமீம் மற்றும் நூலக உதவியாளர் கே.தங்கேஸ்வரி ஆகியோர் நெறிப்படுத்தியிருந்தனர்.
13 minute ago
35 minute ago
45 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
35 minute ago
45 minute ago
46 minute ago