Suganthini Ratnam / 2010 நவம்பர் 16 , மு.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஹனீக் அஹமட்)
கல்முனை, பாண்டிருப்பு சோதனைச் சாவடியருகே இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
கல்முனை பாண்டிருப்பு சோதனைச் சாவடியருகேயுள்ள பிரதான வீதியில் பயணித்த பிக்கப் வாகனமொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டதாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாகவும் இதன்போது, மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, மோதுண்ட மோட்டார் சைக்கிளும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கல்முனை, பாண்டிருப்பு சோதனைச் சாவடி பிரதான வீதியின் குறுக்காக வீதித் தடைகளை பொலிஸார் அமைத்துள்ளதன் காரணமாக வாகனங்கள் பயணிப்பதில் சிரமமாகவுள்ளதாகவும், இதனாலேயே இவ்விடத்தில் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு மற்றும் பிரதான நகர்ப்புறங்கிளில் வீதித் தடைகள் நீக்கப்பட்டு வரும் இன்றைய நிலையில், கல்முனை பாண்டிருப்பு சோதனைச் சாவடியில் வீதித் தடையொன்று தேவைதானா என மக்கள் கேட்கின்றனர்.
1 hours ago
3 hours ago
Maniyan Wednesday, 17 November 2010 01:33 PM
உண்மையில் இந்த செக் பாயிண்ட் தேவை இல்லை.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago