Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2010 டிசெம்பர் 08 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட அஷ்ரப்நகர் பிரதேசத்தில் குடியிருக்கும் 31 பொதுமக்களை அவர்களின் 66 ஏக்கர் விஷ்தீரணமுள்ள காணிகளிலிருந்து வெளியேற்றுமாறு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கர, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளருக்கு, 01 டிசெம்பர் 2010 எனும் திகதியிட்டு அரசாங்க அதிபர் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேற்படி கடிதம் தனக்கு அரசாங்க அதிபரிடமிருந்து கிடைத்துள்ளதாக அட்டாளைச்சேனை பிரசேதச செயலாளர் எம்.எம்.நஸீர் உறுதிப்படுத்தினார்.
அஷ்ரப் நகரைச் சேர்ந்த மேற்படி பொதுமக்கள் தமது காணிகளுக்கான வருடாந்த அனுமதிப்பத்திரத்தினைப் புதுப்பிக்கவில்லை என்றும், அதன் காரணமாக - இவர்களின் காணி உத்தரவுப் பத்திரம் வலுவிழந்து போயுள்ளதாகவும் குறித்த கடிதத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
மேற்படி காணிகளுக்கான அனுமதிப் பத்திரத்திரங்கள் 1980ஆம் ஆண்டு இறுதியாகப் புதுப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக, அஷ்ரப் நகர் மக்கள் பல தடவை தமது குடியிருப்புப் பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்தமை காரணமாக, தமது காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்களை அவர்களால் புதுப்பிக்க முடியாமல் போய்விட்டதாக அப்பிரதேசத்தைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேற்படி குடியிருப்பாளர்களின் காணிகளினூடாக வனவிலங்குத் திணைக்களத்தினர் யானைப் பாதுகாப்பு வேலியினை அமைப்பதற்கு – காணிகளின் சொந்தக்காரர்கள் எதிர்ப்பினைத் தெரிவித்தமையை அடுத்தே, தற்போது அவர்களுடைய காணிகளின் அனுமதி வலுவிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
7 minute ago
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
2 hours ago
4 hours ago
4 hours ago