2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

பிரேத பரிசோதனைக்காக பெண்ணின் சடலம் மீண்டும் தோண்டியெடுப்பு

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 15 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ், எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

சாய்ந்தமருது, பொலிவேரியன் சுனாமி வீட்டுத்திட்டத்தில் 2010 ஒக்டோபர் 3ஆம் திகதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட பெண்ணின் சடலம் சந்தேகத்தின்பேரில் இன்று பிரேத பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்டது.

21 வயதுடைய அப்துல் மனாப் நிஜாமியா என்பவரது சடலமே இன்று தோண்டி எடுக்கப்பட்டது.

இச்சடலம் மேலதிக பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட பெண்ணின் மரணம் சம்பந்தமாக அவரின் கணவனின் குடும்பத்தினர் கொலை என்று சந்தேகப்பட்டதனாலே மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது.

கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.றிஸ்வி தலைமையில் சட்ட வைத்திய அதிகாரிகள் எம்.எம்.ஏ.றஹ்மான், டிக்கிரி பண்டாரகுணத்துங்க  மற்றும் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.என்.மென்டீஸ், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரான் பெரேரா ஆகியோர்கள் முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--