2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

நுளம்பு வலைகள் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2010 டிசெம்பர் 16 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால், 500 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நுளம்பு வலைகள் வழங்கும் நிகழ்வு நேற்று மருதமுனையில் இடம்பெற்றது.

இதன்போது, கல்முனை தெற்கு பொது சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஏ.சி.எம். பசால் பயனாளிகளுக்கு நுளம்பு வலைகளை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கர்ப்பிணித் தாய்மார்கள் மத்தியில் உரையாற்றிய டொக்டர் பசால்

கர்ப்ப காலத்தின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய சுகாதார நடவடிக்கைகள் குறித்தும்,  தாயின் சுகாதார நடவடிக்கைகளால் குழந்தைக்கு கிடைக்கும் அனுகூலங்கள் பற்றியும் விளக்கமளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--