2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

மீன்பிடிக்க சென்ற மூவரில் ஒருவர் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டார்

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 10 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய நீலாவனை கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற மூவரில் ஒருவர் கடல் அலையில்; அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.


பெரிய நீலாவனை, நாதன் ஸ்டேர்ஸ் வீதியைச் சேர்ந்த மீனவர்கள் மூவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை  மீன்பிடிக்கச் சென்றபோது, இவர்கள் சென்ற படகு இடைநடுவில் விபத்துக்குள்ளானது.  இதனையடுத்து, கடற்கரையிலிருந்து மற்றுமொரு படகில் சென்ற சிலர் அவர்களை காப்பாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டபோது படகிலிருந்த இரு மீனவர்களை மாத்திரம் காப்பாற்ற முடிந்ததுடன்,  ஒருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்டார்.

56 வயதுடைய முருகபிள்ளை நவராஜா என்பவரே அலையில் அடித்துச் செல்லப்பட்டவராவார். அவருடைய சடலம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.  கல்முனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--