2025 நவம்பர் 16, ஞாயிற்றுக்கிழமை

உள்ளங்கையில் மறைக்கக்கூடிய துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Janu   / 2025 நவம்பர் 16 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பு , குரன பகுதியில், உள்ளங்கையில் மறைத்து வைக்கக்கூடிய சுமார் 6 அங்குல நீளமுள்ள சிறிய துப்பாக்கியுடன் தொழிலதிபர் ஒருவர்  கைது செய்யப்பட்டதாக கொழும்பு குற்றப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த துப்பாக்கி இதுவரை பாதுகாப்புப் படையினரிடமும் இல்லை என தெரியவந்துள்ளது.

குறித்த துப்பாக்கி பெல்ஜியத்தில் தயாரிக்கப்பட்ட பிரவுனிங் வகை என தெரியவந்துள்ளது.

வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் தொழிலதிபர் ஒருவரிடம் துப்பாக்கி இருப்பதாக கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய சந்தேக நபரின் வீட்டை சுற்றிவளைத்து சோதனையிட்ட போது குறித்த துப்பாக்கி  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் விசாரித்தபோது, ​​அவரது  தந்தையிடமிருந்து இதைப் பெற்றதாகவும், தந்தை தற்போது உயிருடன் இல்லை எனவும் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.   

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X