2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

நல்லிணக்க ஆணைக்குழுவின் அம்பாறை மாவட்ட விஜயம் மீண்டும் ஒத்திவைப்பு

Super User   / 2011 ஜனவரி 14 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அம்பாறை மாவட்டத்திற்கான விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் எஸ்.பி.அத்துக்கொட தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரன நிலமை காரணமாகவே அம்பாறை மாவட்டத்திற்கான விஜயம் ஒத்திவைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், நல்லிணக்க ஆணைக்குழு அம்பாறை மாவட்டத்திற்கு செல்லவுள்ள திகதி பின்னர் அறிவிக்கப்படும் என அத்துக்கொட மேலும் தெரிவித்தார்.

ஜனவரி 21ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை நல்லிணக்க ஆணைக்குழு அம்பாறை மாவட்டத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளவிருந்தது.

நல்லிணக்க ஆணைக்குழு அம்பாறை மாவட்டத்திற்கான விஜயம் கடந்த டிசம்பர் மாதமும் திட்டமிடப்பட்டிருந்து பின்னர் ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   

இதேவேளை, எதிர்வரும் ஜனவரி 28ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை நல்லிணக்க ஆணைக்குழு அநுராதபுரம் மாவட்டத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--