2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

வெள்ள நிவாரணம் வழங்குவதில் பொதுஅமைப்புக்கள் ஆர்வம்

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 19 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

கல்முனை தமிழ், சாய்ந்தமருது ஆகிய பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் உள்ளூர் பொது அமைப்புக்கள் வெள்ள நிவாரணப் பொருட்கள் வழங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சாய்ந்தமருது அகில இலங்கை இஸ்லாமிய இளைஞர் முன்னனி, சாய்ந்தமருது வை.எம்.எம்.ஏ.கிளை, மருதமுனை ஜமாஅதே இஸ்லாமி அமைப்பினர்கள், நிவாரணப் பொருட்கள் விநியோகத்தில் ஈடுபட்டனர்.

கல்முனை தமிழ் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பு சுனாமி வீட்டுத்திட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மருதமுனை ஜமாஅதே இஸ்லாமிய அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிவாரணம் விநியோகிக்கப்பட்டன.  இதில் கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் கே.லெவநாதன், கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X