2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

கிராம உத்தியோகஸ்தருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Super User   / 2011 ஜனவரி 21 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட சாலம்பக்கேணி முதலாம் பிரிவு கிராம உத்தியோகஸ்தரின் போக்கினை கண்டித்தும், அவருக்குப் பதிலாக வேறொரு கிராம உத்தியோகஸ்தரை நியமிக்க கோரியுமான ஆர்ப்பாட்டமொன்று இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையையடுத்து சாலம்பக்கேணி மஸ்ஜிதுல் சபூரியா பள்ளிவாசல் முன்பாக இடம்பெற்றது.

பள்ளிவாசல் நிர்வாகம், பொது அமைப்புக்கள் மற்றும் கிராம மக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்ட நிகழ்வில் நூற்றிற்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் இறுதியில் கிராம உத்தியோகஸ்தருக்கு எதிரான மஹஜரொன்றை நாவிதன்வெளி உதவி பிரதேச செயலாளர் எஸ்.கரணிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--