Editorial / 2025 ஒக்டோபர் 24 , பி.ப. 01:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

கர்நாடகாவின் மங்களூரில், இளைஞர்களை குறிவைத்து ஆபாச உள்ளடக்கங்களை அனுப்பி பணம் பறித்து வந்த 25 வயது இளம்பெண் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தப் பெண்ணின் செயலால் உடுப்பியைச் சேர்ந்த ஒரு இளைஞர் தன்னுயிரை மாய்த்துக் கொண்டதாகவும், அவரது சடலம் மீட்கப்பட்டதாகவும் பொலிஸ் தகவல் தெரிவிக்கிறது.
இந்த சம்பவம், சமூக ஊடகங்கள் மூலம் நடக்கும் சைபர் கிரைம்களின் ஆபத்தை மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டியுள்ளது.பொலிஸ் வழக்குப் பதிவு படி, கைது செய்யப்பட்ட பெண், சமூக ஊடகங்களில் இளைஞர்களை அணுகி அவர்களுடன் நெருக்கமான படங்கள் எடுத்து வைத்திருந்தார்.
அந்தப் படங்களை ஆபாச வலைத்தளங்களில் பதிவேற்றி, அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, " நானும் உங்க பையனும் தனிமையில் இருக்கும் போது.. ஆணுறையில் ஓட்டை போட்டேன்.. உங்க பையனை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்.. நான் கர்ப்பமாக இருக்கிறேன்" என்று போலியான கூற்றுகளைப் பயன்படுத்தி, இளைஞர்களின் குடும்பங்களை அச்சுறுத்தி பணம் வசூலித்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்தச் சதியில், பெண்ணுடன் தங்கியிருந்த தோழிகளின் குளியலறை காட்சிகளையும் அவர் வீடியோவாகப் பதிவு செய்திருந்ததாக பொலிஸ் கண்டுபிடித்துள்ளது. இந்த வீடியோக்களும் அவரது பண வசூல் திட்டத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட பெண்ணின் கைப்பிடியில் இருந்து பல ஆபாச வீடியோக்கள் மற்றும் படங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.உடுப்பியைச் சேர்ந்த 28 வயது இளைஞர், தனது சமூக ஊடக கணக்கில் பெண்ணால் பகிரப்பட்ட ஆபாச படங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, கடந்த வாரம் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
அவரது குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்ததன் அடிப்படையில், மங்களூர் சைபர் கிரைம் பொலிஸ் அணுகல் பொலிஸ் நிலையம் விசாரணைத் தொடங்கியது.
மங்களூர் சைபர் கிரைம் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் குமார், "இளைஞர்கள் சமூக ஊடகங்களில் அந்நியர்களுடன் பழகும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது போன்ற சதிகள் அதிகரித்து வருவதால், பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக பொலிஸை அணுக வேண்டும்" என்று எச்சரிக்கை விடுத்தார்.
கைது செய்யப்பட்ட பெண், மங்களூரைச் சேர்ந்தவர் என்றும், அவர் மீது மேலும் வழக்குகள் பதிவாகலாம் என்றும் பொலிஸ் தெரிவித்துள்ளது.இந்த சம்பவம், இளைஞர்களிடையே சமூக ஊடக பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. பொலிஸ், இதுபோன்ற கிரைம்களுக்கு எதிராக விரிவான விசாரணையைத் தொடர்ந்து நடத்தும் என அறிவித்துள்ளது.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago