2025 ஒக்டோபர் 24, வெள்ளிக்கிழமை

சரத்குமாருக்கு என்ன ஆசை தெரியுமா?

Editorial   / 2025 ஒக்டோபர் 24 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதீப் ரங்கநாதனின் டியூட் படம் பாக்ஸ் ஆபீஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இதன் மூலம் பிரதீப் ரங்கநாதன் தொர்ந்து 3 முறை ரூ.100 கோடி வசூலித்த படத்தை கொடுத்த நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவரது முந்தைய படங்களான லவ் டுடே மற்றும் டிராகன் படங்கள் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்தது.

இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக சென்னையில் டியூட் படத்தின் வெற்றிவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சரத்குமார் ரசிகர்களிடம் கலகலப்பாக பேசினார்.

அவர் கூறுகையில், ‘இந்த படத்திற்கு பின் பிரதீப் ரங்கநாதனின் ரசிகர்கள் என்னையும் டியூட் என்று அழைக்கிறார்கள். நானும் இப்போது டியூட் ஆக மாறிவிட்டேன். நவீன் சார் அல்லது ரவி சார் அடுத்த படத்தில் தீபிகா படுகோனை என் கதாநாயகியாக்கி டூயட் பாட வைத்தால் நான் அதைச் செய்யத் தயாராக இருக்கிறேன்"’ என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X