2025 ஒக்டோபர் 24, வெள்ளிக்கிழமை

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு இல்லை

Freelancer   / 2025 ஒக்டோபர் 24 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இது ஒரு தீவிர பிரச்சினையாக கருதப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். 

பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டிய அவர், 

வெலிகம பிரதேச சபைத் தலைவர் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்த போதிலும், அவருக்குத் தேவையான பாதுகாப்பு வழங்கப்படாததால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு இல்லை. பல பாராளுமன்ற உறுப்பினர்கள் இதே போன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். 

இது நகைச்சுவையல்ல. ஒருவர் கொல்லப்பட்டால் என்ன செய்ய முடியும்? வெலிகம சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X