2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

அம்பாறையில் மீண்டும் அடை மழை

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 26 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல் அஸீஸ்,எஸ்.எம்.எம்.றம்ஸான்)

அம்பாறை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை முதல் மீண்டும் காற்றுடன் கூடிய அடை மழை பெய்து வருகின்றது. இதனால், அங்கு வெள்ள அபாய நிலை தோன்றியுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பெய்த அடை மழையால் ஏற்பட்ட  வெள்ள அனர்த்தத்தால் குடியிருப்புக்கள் மற்றும் ஏனைய பகுதிகளும் பாதிக்கப்பட்டு நிலையில் இடம்பெயர்ந்த மக்கள் சில நாள்களுக்கு முன்னரே தமது குடியிருப்புகளுக்கு திரும்பியிருந்தனர்.   

இந்நிலையில், மக்கள்  மத்தியில் மீண்டும் அச்ச நிலைமை உருவாகியுள்ளது.

கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலை உட்பட ஏனைய சில பாடசாலை வகுப்பறைகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதனால் இன்று பாடசாலை மூடப்பட்டுள்ளது.

மழையினால் சாய்ந்தமருது ஒன்பதாம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பழைய சந்தை வீதியில்  வெள்ளம் ஏற்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X