Menaka Mookandi / 2011 பெப்ரவரி 23 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

(அப்துல் அஸீஸ்)
சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையில் மருத்துவ தேவைக்களுக்காக மின் உபகரணங்கள் பாவிப்பதில் ஏற்பட்ட சிரமங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் இனால் தீர்த்து வைக்கப்பட்டது.
சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை சுனாமி அனர்தத்தினால் பாதிக்கப்பட்டு வேறு ஒரு இடத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட நிலையில் சுமார் ஒரு வருடகாலமாக இயங்கிவந்த போதும், இந்த மருத்துவமனைக்கென தனியான மின் மாற்றி ஒன்று பொறுத்தப்படவில்லை.
இதன் காரணத்தினால், மருத்துவமனையிலுள்ள இலத்திரனியல் உபகரணங்கள் உட்பட அனைத்துவிதமான மின் பாவனைகளும் குறைந்த மின் அழுத்தத்துடன் சிரமத்திற்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இந்நிலையை மாவட்ட வைத்திய உத்தியோகத்தர் எம்.டி.இப்றாஹீம் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸின் கவனத்திற்கு கொண்;;டுவந்ததையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினரின் முயற்சியினால் வைத்தியசாலைக்கென தனியான மின் மாற்றி ஒன்று பொறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

7 hours ago
9 hours ago
02 Nov 2025
02 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
02 Nov 2025
02 Nov 2025