2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

அம்பாறை மாவட்டத்தில் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் திட்டம்

Kogilavani   / 2011 ஜூன் 12 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம். ஹிஜாஸ்)
அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை, அக்கறைப்பற்று, ஆலையடி வேம்பு மற்றும் திருக்கோவில் ஆகிய பகுதிகளில் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளில் மக்களின் பங்களிப்புடனான அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் 35 மில்லியன் ரூபா பெறுமதியான வேலைத் திட்டம் சமூக நம்பிக்கை நிதியத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இத் திட்டத்தில் எதிர்காலங்களில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுமாயின் மக்களினால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக மக்களுக்கு தெளிவூட்டும் நடவடிக்கைகள், சுனாமியினால் பாதிப்படைந்த வீதிகளினை புனரமைப்பு செய்தல், கடற்கரையோரங்களில் மரங்களினை நாட்டுதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

தற்போது இத்திட்டம் தொடர்பாக அரச அதிகாரிகளுக்கும், தெரிவு செய்யப்பட்ட பகுதிகளின் பயனாளிகளுக்கும் தெளிவூட்டும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திட்ட முகாமையாளர் பளீல் முஹம்மது நிப்றாஜ் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .