Kogilavani / 2011 ஜூன் 14 , மு.ப. 07:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஹனீக் அஹமட்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்புக் கல்வி வலயத்துக்குட்பட்ட துறைநீலாவணை மகா வித்தியாலய மாணவர்கள் இன்று பாடசாலை பகிஸ்கரிப்பு நடவடிக்கையொன்றில் ஈடுபட்டதோடு, கவன ஈர்ப்பு போராட்டமொன்றிலும் கலந்து கொண்டனர்.
தமது பாடசாலையிலிருந்து அதிகமான ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படுவதைக் கண்டித்தே மேற்படி மாணவர்கள் இப் பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மாணவர்களின் இந்நடவடிக்கையினால் துறைநீலாவணை மகா வித்தியாலயத்தின் கல்வி நடவடிக்கைகள் முற்றாக இன்று முடங்கிப் போயிருந்தன.
ஆசிரியர்கள் பாடசாலைக்கு வருகை தந்திருந்த போதிலும், மாணவர்கள் பாடசாலைப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டதன் காரணமாக கற்பித்தல் நடவடிக்கைகள் எதுவும் இடம்பெறவில்லை.
சுமார் 750 மாணவர்கள் கல்வி கற்கும் இந்தப் பாடசாலையில் 46 ஆசிரியர்கள் சேவையாற்றுகின்றனர்.
இதில் 6 ஆசிரியர்கள் மேலதிகமாக இருந்த நிலையில், 13 பேர் இடமாற்றத்துக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
36 minute ago
44 minute ago
6 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
44 minute ago
6 hours ago
21 Dec 2025