Super User / 2011 ஜூன் 14 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் அஸீஸ்)
கல்முனை மாநகரசபைக்குட்பட்ட பிரதேசங்களில் காணப்படும் குறைபாடுளை நிவர்த்தி செய்தல் தொடர்பான கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீசின் கல்முனை செயலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், கல்முனை மாநகர மேயர் மஸுர் மௌலானா, ஆணையாளர் எம்.ஏ.எம். நியாஸ், பிரதி மேயர் ஏ.வஸீர், மாநகர சபை உறுப்பினர்கள், கல்முனை பிரதேச வர்த்தக சங்க பிரதிநிதிகள் மற்றும் ஆசியா மன்ற பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தின் போது கல்முனை மாநகர சபை எல்லைக்குள் காணப்படும் தேவைப்பாடுகள் தொடர்பான முன்னுரிமை பட்டியல் தயாரித்து அதற்கமைவாக நிகழ்ச்சித்திட்டங்களை வடிவமைத்து, நடைமுறைப்படுத்தல் மற்றும் மாதாந்தம் இக்குழு முன்னேற்ற நடவடிக்கைகளுக்காக கூடுதல் ஆகிய இரு முடிவுகள் நிறைவேற்றப்பட்டன.

46 minute ago
2 hours ago
radan Wednesday, 15 June 2011 02:22 AM
இந்த ஆசிய மன்ற பிரதிநிதிகளுக்கு இந்த மாநகர சபையை விட்டால் வேறு இடம் எதுவும் தெரியாதா?
Reply : 0 0
sabras Wednesday, 15 June 2011 03:08 AM
இதை போன்று எத்தனையோ கூட்டங்கள் நடந்து முடிந்துவிட்டன ..... இதுவும் அதுபோல ஒன்றுதான் !!!!!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
2 hours ago