2025 நவம்பர் 18, செவ்வாய்க்கிழமை

மனைவி மரணம் : கணவரை தேடும் பணிகள் தீவிரம்

Freelancer   / 2025 நவம்பர் 18 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிமடை, போரலந்த, கந்தேபுஹுல்ப்பொல பிரதேசத்தில் வௌ்ளத்தில் சிக்கி காணாமல் போன தம்பதியினரில் மனைவி சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், கணவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வெலிமடைப் பிரதேச செயலாளர் பிரிவில் நேற்று (17) மாலை பெய்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் இவர்கள் காணாமல் போயிருந்தனர்.

நேற்று இரவு முழுவதும் பிரதேசவாசிகளால் இந்தத் தம்பதியினரைத் தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதன்போது மனைவியின் சடலம் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இவ்வாறு உயிரிழந்தவர் 32 வயதுடைய பெண் என்றும், காணாமல் போனவர் 37 வயதுடைய ஆண் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.  R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X