2025 நவம்பர் 18, செவ்வாய்க்கிழமை

மீட்டியாகொட துப்பாக்கிச் சூடு ; மோட்டார் சைக்கிள் சிக்கியது

Janu   / 2025 நவம்பர் 18 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீடியாகொட , கிரலகஹவெல சந்தியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் பத்தேகம பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

பத்தேகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, படபொல - பத்தேகம வீதியில் அம்பேகம அம்பலத்திற்கு அருகிலிருந்து கைவிடப்பட்டிருந்த குறித்த மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மீடியாகொட, அலுத்வல ஊடாக பத்தேகம நோக்கிப் பயணிக்கும் போது மோட்டார் சைக்கிளை வழியில் விட்டுச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.  

இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான  விசாரணைகளை மேற்கொள்ள 3 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X