Kogilavani / 2011 ஜூன் 15 , மு.ப. 06:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(அப்துல் அஸீஸ்)
சம்மாந்துறை விக்னேஸ்வரர் வித்தியாலயத்தில் மின்சார இணைப்பு இன்மையால் மாணவர்களின் கற்றல் நடவடிக்கை பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக பாடசாலை அபிவிருத்திக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.
2000ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இப்பாடசாலைக்கு இன்றுவரை மின்சார இணைப்பு பெற்றுக்கொடுக்கப்படாததனால் மாணவர்களுக்கு முறையான கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாக பாடசாலை அபிவிருத்தி குழுவினர் தெரிவிக்கின்றனர்.
இப்பாடசாலையில் 65 மாணவர்களும் 6 ஆசிரியர்களும் காணப்படுகின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக கல்வி அதிகாரிகளையும், அரசியல் பிரமுகர்ளையும் தொடர்புக்கொண்டு தெரிவித்தபோதும், அதற்கான மாற்று நடவடிக்கைகள் எதனையும் இதுவரை எடுக்கவில்லையென அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
எனவே இவ்விடயம் தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
9 hours ago
30 Oct 2025
30 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
30 Oct 2025
30 Oct 2025