2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

சிறுமிகள் மூவர் மீது பாலியல் துஷ்பிரயோகம்; சந்தேகநபர்கள் அக்கரைப்பற்றில் கைது

Menaka Mookandi   / 2011 ஜூன் 15 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் சிறுமிகள் மூவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மூன்று சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

திராய்க்கேணி, பட்டியடிப்பிட்டி, கண்ணகிபுரம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மூன்று சிறுமியரே வெவ்வேறு சந்தர்ப்பங்களின் போது துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவின் கீழ் உள்ள திராய்க்கோணி பிரதேசத்தில் 11 வயது சிறுமியை பக்கத்து வீட்டு குடும்பஸ்தர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.

இதேவேளை, அக்கரைப்பற்று, பள்ளிக்குடியிருப்பு பிரதேசத்தில் 14 வயது சிறுமியொருவரை இரண்டாவது முறையாகவும் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் 18 வயது இளைஞன் ஒருவர் தமணை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த மேற்படி இளைஞன், ஒரு இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையிலேயே மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஆலையடிவேம்பு, கண்ணகிபுரம், முதலாம் பிரிவில் 4 வயது சிறுமியை பக்கத்து வீட்டு 44 வயது குடும்பஸ்தர் ஒருவர் பாலியல் சேட்டை புரிந்தார் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவங்களின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இராமக்கமலன் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது 11 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 7
நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறும் பாதிக்கப்பட்ட சிறுமியை
வைத்தியசாலையில் அனுமதிக்குமாறும் உத்தரவிட்டார்.

அத்துடன், 14 வயது சிறுமியை இரண்டாவது தடவையாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த 18 வயது இளைஞனை 25 ஆயிரம் ரூபா பிணையில் விடுவித்த நீதிவான் சிறுமியை மட்டக்களப்பு சிறுவர் நன்நடத்தை பிரிவில் ஒப்படைக்குமாறும் 4வயது சிறுமி மீது பாலியல் சேட்டை புரிந்த 44 வயது குடும்பஸ்தரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.


  Comments - 0

  • IBNU ABOO Friday, 17 June 2011 02:24 AM

    அப்போ அம்பாறையில் இது பாலியல் வாரம் எண்டு சொல்லுங்கோ.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .