Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 ஜூலை 16 , மு.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
கல்முனையில் பிராந்திய ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு கல்முனை மணல் சேனை அலுவலகத்தில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றது.
எம்.ஆர்.டி (MRT) நிறுவனத்தின் சமூக சேவைப்பிரிவின் ஏற்பாட்டில் தலைவர் ஏ.கபூர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல், கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் க.லவனாதன், திருக்கோவில் பிரதேச செயலாளர் வீ.அழகரட்ணம் , பொறியியலாளர்களான ஏ.எம்.றிஸ்வி, கே.எல்.எம்.ஸ்மாயீல் , ஐ.எல்.பாரி, பேராசிரியர் எம். ராஜேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது நீண்டகாலமாக பிராந்திய ஊடகவியலாளர்களாக கடமையாற்றிய ஏ.எல்.எம்.சலீம், அலியார் முசம்மில், வீ.டி.சகாதேவராஜா, எம்.சஹாப்தீன், எம்.ஐ.சம்சுதீன், ஆர்.சிரிவேல்ராஜா, பீ.எம்.எம்.ஏ.காதர், எஸ்.சிராஜுதீன், யு.முஹம்மது இஸ்ஹாக், எஸ்.பேரின்பராசா, எஸ்.எம்.எம்.ரம்ஸான், ஏ.எம்.பளீல், ஏ.எஸ்.எம்.முஜாஹித், ஏ.எல்.ஏ.மஜீத், எஸ்.துசியந்தன், பீ.கேதீஸ், எஸ்.எல்.அசீஸ் ஆகியோரே பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கு சான்றிதழ்களும் நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன.
11 minute ago
16 minute ago
37 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
16 minute ago
37 minute ago
41 minute ago