2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

நிந்தவூர் பிரதேசத்தில் பல அபிவிருத்தி வேலைகள் ஆரம்பித்துவைப்பு

Super User   / 2011 ஜூலை 16 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.ஆர்.அஹமட்)

கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பபை நிந்தவூர் பிரதேசத்தில் பல அபிவிருத்தி வேலைகளை இன்று சனிக்கிழமை ஆரம்பித்துவைத்தார்.

நிந்தவூர் மக்களின் நீண்ட கால தேவையாக இருந்த மாவட்ட வைத்தியசாலை வீதி அமைப்பை ஆரம்பித்து வைத்தார். மேலும் நெசவுசாலை வீதி அபிவிருத்தி வேலையையும் ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது, நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்திற்கு மின்சார ஒளி அமைப்பை ஏற்படுத்துவதற்கான ஆரம்ப வேலைகளும் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இவ்வைபவத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துல்ஷான், நிந்தவூர் பிரதேச சபைத் தலைவர் எம்.ஏ.எம். தாஹிர்இ நிந்தவூர் பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா உட்பட் பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0

  • vaasahan Friday, 22 July 2011 04:00 PM

    டபுள் எம்பி மார் டபுள் தரம் இருந்து சேவை செய்யுற ஊர்கள் பார்த்து நல்ல சேவை செய்யுங்க அமைச்சரே.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--