2021 மே 08, சனிக்கிழமை

நகரை அழகு படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்

Kogilavani   / 2011 செப்டெம்பர் 16 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)
ஆலையடிவேம்பு பிரதேசத்தின் நகரை அழகுபடுத்தலும் வீதிகளை சுத்தமாக வைத்திருப்பதும் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸாருக்கும் ஆலைடிவேம்பு பிரதேச  வர்த்தகர்களுக்கான கூட்டம் நேற்று வியாழக்கிழமை   ஆலையடிவேம்பு பிரதேச கலாசார மண்டபத்தில் நடைபெற்றது

இதில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் இந்திக டி சில்வா, அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ஜி. முகமட் இஷாட், ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் க.இரத்தினவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது, வீதிகளில் குப்பைகளை கொட்டுதல், கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்துதல், வீதிகளை சுத்தமாக வைத்து அழகுபடுத்தல் போன்றவை தொடர்பாக ஆராயப்பட்டது. இதேவேளை எதிர்வரும் செவ்வாய்கிழமை பொலிஸாரும் வர்த்தகர்களும் இணைந்து வீதிகளையும் நகரையும் சுத்தம் செய்யும் சிரமதான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளனர்.

அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று பிரதேசங்களிலும் இந் நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென பொலிஸார் தெரிவித்தனர்.


 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X