2021 மே 08, சனிக்கிழமை

இந்தியர்கள் மூவர் கல்முனையில் கைது

Kogilavani   / 2011 செப்டெம்பர் 22 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)
கல்முனை பிரதேசத்தில் விடுதியொன்றில் சட்டவிரோதமான முறையில் வியாபாரம் செய்த இந்திய வியாபாரிகள் மூவரை நேற்று புதன்கிழமை இரவு விசேட அதிரடிப்படையின் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து கல்முனையில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்து சட்டவிரோதமான முறையில் புடவை வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதாவும் புதன்கிழமை இரவு  தங்கியிருந்த விடுதியில் வைத்து கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை கல்முனை நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0

  • pasha Friday, 23 September 2011 02:58 PM

    இவ் வியாபரிகள் குறைந்த விலையில் மக்களுக்கு புடவைகள் விற்கின்றார்கள். அது அங்குள்ள பிரசித்தி பெற்ற புடவை வியாபாரிகளுக்கு பிடிக்கவில்லை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X