2021 மே 08, சனிக்கிழமை

'கிழக்கு முதலமைச்சர் பதவி முஸ்லிம் காங்கிரஸிற்கு வழங்கப்படும் என்றால் மாத்திரமே அரசுடன் இணைந்து போட்

Super User   / 2011 செப்டெம்பர் 26 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

எதிர்வரும் 2013ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபை தேர்தலின் பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்தவர் தான் முதலமைச்சராக நியமிக்கப்படுவார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கல்முனை பிரதேசத்தில் நேரில் வந்து பிரகடணப்படுத்தினால் மாத்திரம் தான் எமது கட்சி அரசாங்கத்துடன் போட்டியிடும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

அவ்வாறு இடம்பெறவில்லையென்றால் நிச்சயமாக அரசாங்கத்திலிருந்து பிரிந்து சென்று தனித்து போட்டியிட்டு ஏனைய கட்சிகளோடு இணைந்து ஆட்சியமைப்போம் என்ற செய்தியை அரசாங்கத்திற்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என குறிப்பிட்டார்.

கல்முனை மாநகர சபை தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து சாய்ந்தமருது கடற்கரை வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அக்கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய பிரதியமைச்சர் பஷீர் சேகுதாவூத்,

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பாக இருந்தாலும் சரி ஐக்கிய தேசிய கட்சியாக இருந்தாலும் சரி கிழக்கு மாகாணத்தில் ஆட்சியை கைப்பற்ற வேண்டுமானால் முஸ்லிம் காங்கிரஸ் கேட்கின்ற அனைத்ததையும் வழங்கி அக்கட்சியுடன் இணைந்து போட்டியிட்டால் மாத்திரமே ஆட்சியை கைப்பற்ற முடியும்.

இத்தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தனித்து போட்டியிடுவது நிச்சயம். இதனால் அரசாங்கத்தினால் தனித்த ஆட்சி அமைக்க முடியாது.

கிழக்கு மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டால் தான் கட்சி என்ற அமைப்பு இருக்கும். அப்போது தான் மாகணத்தில் உள்ள முஸ்லிம்களின் அரசியல் அந்தஸ்த்து இருக்கும். அதனூடாக அபிவிருத்தி கிடைக்கும். இதுவே எமது  மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபின் கனவாகும். அந்த கனவை நினைவாக்க வேண்டும். அதற்காகத்தான் இந்த தேர்தலை நாம் பயன்படுத்துகின்றோம்.

எனவே தான் கடந்த 30 ஆண்டுகளாக கட்டிக்காத்த இந்த கடசியின் கொள்கைகளை காப்பற்றி இத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும். தனி நபர்கள் சண்டையிட்டு கொள்வதற்காக அல்ல இக்கட்சி. மறைந்த தலைவரின் கனவை நனவாக்க அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அழிப்பதே பெரும்பான்மை இன கட்சிகளின் நோக்கமாகும். அதற்காகவே முஸ்லிம் காங்கிரஸிலிருந்து சிலரை பிரித்தெடுத்து அமைச்சு  பதவிகளையும் அபிவிருத்திகளையும் அரசாங்கங்கள் வழங்குகின்றன.

நாடாளுமன்றம் மற்றும் மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவது குறித்த பதவிக்காவே. ஆனால் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுபவர்கள் மேயர் அல்லது தவிசாளர் பதவிக்கே என்று தான் போட்டியிடுவார்கள். இங்குள்ள 25 வேட்பாளர்களினதும் நோக்கம் மேயராககுவதே தவிர உறுப்பினராகுவதல்ல.

யாரும் இந்த சாய்ந்தமருது மக்களை ஏமாற்றி விட முடியாது. அக்கரைப்பற்றை ஓருவர் ஏமாற்றினார். மட்டக்களப்பிலுள்ள மூன்று முஸ்லிம் பிரதேசங்களை மூன்று பேர் ஏமாற்றினார்கள. பல சிறிய முஸ்லிம் கிராமங்களை ஒருவர் ஏமாற்றினார். ஆனால் அமைச்சு பதவியை கொண்டு எந்த கொம்பனாலும் இந்த சாய்ந்தமருது மக்களின் தலையில் மிளகாய் அரைக்க முடியாமல் போய்விட்டது என்பதே வரலாராகும்.

தனி நபர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஊர் அல்ல இந்த ஊர். முஸ்லிம் காங்கிரஸிற்கு முதன்மையை வழங்கிய ஊராகும். எந்த வேட்பாளரும் தையிரியமிருந்தால் சொல்லட்டும் நான் முஸ்லிம் காங்கிரஸின் மர சின்னத்தில் போட்டியிடாது வேறு எந்த கட்சியின் சின்னத்திலாவது போட்டியிட்டு வென்று மேயராகுவேன் என்று.

முன்னார் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிஸை கல்முனை மாநகர மேயராக்கினோம். இந்த ஊரை சேர்ந்த பஷீரை பிரதி மேயராக்கினோம். இவர்களை விருப்பு வாக்குகளின் அடிப்படையிலே தெரிவு செய்தோம். அது போன்று இம்முறையும் மக்கள் ஆணையை மீறி எந்த தனி நபரையும் மேயராக நியமிக்கமாட்டோம் என்ற உத்தரவாதத்தை நான் இவ்விடத்தில் வழங்குகிறேன்.

எனினும் மக்களுடைய ஆணையை முஸ்லிம் காங்கிரஸ் மீறி வரலாறும் உண்டு. அது மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபால் மேற்கொள்ளப்பட்டது.  ஆனால் இன்றை தலைவர் ரவூப் ஹக்கீம் ஒருபோதும் அவ்வாறு செய்யமாட்டார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சாய்ந்மருது என்று கல்முனை என்று மருதமுனை என்று நற்பட்டிமுனை என்று பிரித்து பார்ப்பதில்லை என்றார்.


  Comments - 0

 • சிறாஜ் Wednesday, 28 September 2011 03:42 AM

  இதுதான் முஸ்லீம் காங்கிரஸ் தனித்துவமாக செயல் படும் வீரம் கொண்ட ஒரு கட்சிதான் இது ஆனால் இப்ப ஊருக்கு ஒரு கட்சியும் வீட்டுக்கொரு கட்சியும் உருவாக்கி அதற்க்கு தலைவர் என்று சொல்லிட்டு பம்மாத்துக்காட்டும் சிலரிடம் என்றால் இதனைச்சொல்லலாம். ஆனால் இங்கு இது பலிக்காது.

  Reply : 0       0

  jeya Monday, 26 September 2011 11:34 PM

  ஹரீஸ் நிச்சயம் நிசாமுக்கு ஆதரவு அளித்து கல்முனை மேயர் ஆக்குவர் என நம்புகிறம் இன்ஷா அல்லாஹ்.

  Reply : 0       0

  Ashashi Monday, 26 September 2011 11:48 PM

  கதைத்தது போதும் செயலில் காட்டுங்கள் அய்யா.

  Reply : 0       0

  faththa Monday, 26 September 2011 11:57 PM

  கல்முனை சாய்ந்தமருது நற்பட்டிமுனை மருதமுனை எல்லாம் நமது ஊர்தான் என்று நினைத்தால் மட்டும்தான் s l m c மேயர் ஆவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.
  Reply : 0       0

  ruzny Tuesday, 27 September 2011 12:49 AM

  இதை நீங்கள் சொல்ல தேவை இல்லை.. முஸ்லிம் கங்கிரசிக்கு இப்போது கல்முனை தொகுதி மட்டும்தான் கையில் உள்ளது .. உங்களது தொகுதி கூட உங்களிடம் இல்லையே ஐயா.....

  Reply : 0       0

  Hari Tuesday, 27 September 2011 01:03 AM

  முஸ்லீம்களின் ஒற்றுமையை கல்முனை உணர்த்த வேண்டும்.

  Reply : 0       0

  rase Tuesday, 27 September 2011 01:18 AM

  baseer mp, unkad [SLMC] kuddu illamal immurai arasangam aadci amaikka villya?

  Reply : 0       0

  oruvan Tuesday, 27 September 2011 01:35 AM

  ஆம் , நிசாம் தான் மேயருக்கு மிகத் தகுதியானவர்.

  Reply : 0       0

  nakkiran Tuesday, 27 September 2011 04:12 AM

  பேராசை பெரும் தரித்திரம் , அரசில்வாதிக்கு இது வழமை.

  Reply : 0       0

  kamsab Tuesday, 27 September 2011 04:22 AM

  இறுதி நேரத்தில் நள்ளிரவில் முடிவை தீர்மானிப்பவர்கள்(மாற்றுபவர்கள் ) 2013 இல் நடைபெறவுள்ள தேர்தல் பற்றி இப்போது பேசுகிறார்கள் (உறுதி மொழி கூறுகிறார்கள் மக்களை வார்த்தை ஜாலங்களால் ஏமாற்றி பப்பாசி மரத்தில் ஏற்றுகிறார்கள் (தேர்தல் காலங்களில் மாத்திரம்).

  Reply : 0       0

  vaasahan Tuesday, 27 September 2011 04:59 AM

  கொள்கைப் பிடிப்பான பேச்சு.

  Reply : 0       0

  sameer Tuesday, 27 September 2011 06:05 AM

  மாகாண சபை தேர்தலில் நீங்கள் தனித்து போட்டி இட்டால் மூன்று ஆசனத்துக்கு மேல் பெற முடியாது. உங்களுடைய வாக்கு வங்கி கல்முனை , சாய்ந்தமருது ,நிந்தவூர் மட்டும்தான் முடிந்தால் ஓட்டமாவடிக்கு செல்லுங்கள்.

  Reply : 0       0

  rozan Tuesday, 27 September 2011 07:45 AM

  இப்போதைய முஸ்லிம் காங்கிரஸ் தான் ஊர் வாதத்தினையும் ஊருக்கு ஒரு ஏம் பீ வேட்பாளரையும் உண்டாக்கி சின்னபின்னமாக்கியது....முன்னர் அவ்வாறு இருக்கவில்லை......

  Reply : 0       0

  pasha Tuesday, 27 September 2011 03:00 PM

  மட்டக்களப்பு மக்கள் நிராகரித்த இம் மனிதர் சாய்ந்தமருது மக்களுக்கு புத்தி சொல்கிறார். இவருக்கு தெரியும் எதனை தடவை தோற்றாலும் தேசியபட்டியல் எம் பீ யும் பிரதி அமைச்சர் பதவியும் தனக்கு எழுதப்பட்ட ஒன்று எண்டு.

  Reply : 0       0

  uoorann Tuesday, 27 September 2011 04:12 PM

  நிசாம் சேர் சாய்ந்தமருது கூட்டத்தில மாநகர சபையின் அதிகாரங்கள நல்லா சொன்னார். அவரைப்போல ஆட்கள் தான் நம்மட சபைக்கு மேயரா வரணும். இதுல இன்னும் சொன்னார். இப்ப அறிவு ரீதியாக வேல செய்ய வேண்டியதும் அவசியம். நிசாம் சேர் தான் மேயருக்கு பொருத்தமானவர் சிந்தயுங்கள் பிரதேச வதம் பேசாதீர்கள். பின்பு யோசித்து பிரயோசினம் இல்லை. .

  Reply : 0       0

  firas Tuesday, 27 September 2011 04:41 PM

  சிராஸ் மீரா சாஹிப் அவர்கள் தான் மேயர். கூட்டத்தில் அவரின் ஆதரவை நேரில் எல்லோரும் கண்டார்கள் .

  Reply : 0       0

  Riyal A.M Tuesday, 27 September 2011 05:37 PM

  கட்சி விட்டு கட்சி மாறும் வித்தை கற்று.... மேயராக....மாறுவோம் ...அழகிய அசுரா .... அழகிய அசுரா...... ச்சே.........ச்சீ ........

  Reply : 0       0

  Hameed faleel Tuesday, 27 September 2011 06:03 PM

  well, dreaming about the chief ministor of eastern province, start to lie and cheating the public.

  Reply : 0       0

  uoorann Tuesday, 27 September 2011 06:32 PM

  மையோன் கூட்டாத கூட்டமா? ஜமீல் காட்டாத சனமா ? தம்பி சிரஸ் பப்புள் மரத்தில எர வேனாம். சிலர் சாப்பிட்டுட்டு ஓடிடுவார்கள் கவனம்.

  Reply : 0       0

  Ramzan Tuesday, 27 September 2011 07:03 PM

  மறைந்த தலைவர் மக்களின் ஆனையை மீறிச் செயற்பட்டதுண்டு. ஆனல் தலைவர் மக்கள் எதிர்பார்த்ததை செய்வத‌ற்கு தான் அவ்வாறு செய்தார்m காரணத்தோடு. தலைவரை குறை கூறும் அளவுக்கு உங்களை போல் உள்ளவர் எல்லாம் குறை கூறும் காலம் வந்துவிட்டது. உங்களுக்கு நினைவிருக்கட்டும் நீங்கள் எவ்வாற அமைச்சுப் பதவியில் இருக்கீன்றீர்கள் என்று, அத்துடன் அமைச்சர் பசீர் அவர்களே முஸ்லிம் காங்கிரஸிற்கு எதற்காக வாக்களிக்க வேண்டும் என்று கூறுங்கள்.

  Reply : 0       0

  NALLAWAN FROM Colombo Tuesday, 27 September 2011 09:12 PM

  இப்போ இப்படித்தான் பேசுவர்,,,,,,தேர்தல் முடிந்ததும் வேதாளம் அரசாங்க மரம் ஏறும்.... நம்பிட வேணாம் அப்பாவி மக்களே...........

  Reply : 0       0

  Anwer Noushard MJM Tuesday, 27 September 2011 11:19 PM

  இவ்வளவு துணிச்சலா வேற யாராவது சவாலாவது விடுவார்களா?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X