2021 மே 15, சனிக்கிழமை

உலக வங்கியின் நிதியெதுக்கீட்டில் ஸாஹிறா கல்லூரி வீதி புனநிர்மாணம்

Super User   / 2011 செப்டெம்பர் 28 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

உலக வங்கியின் நிதியொதுக்கீட்டின் கீழ்  கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின்  வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் 40 மில்லியன் ரூபா செலவில்  புனநிர்மாணம் செய்யப்படவுள்ள கல்முனை ஸாஹிறா கல்லூரி வீதிக்கான அங்குராப்பண நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

இந்த வீதிக்கான நினைவு படிகத்தினை உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவும் திட்ட வரைபடத்தினை கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சா எம்.எஸ்.உதுமாலெவ்வை மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.துல்கா நயீம் ஆகியோர் திரை நீக்கம் செய்தனர்.

கல்முனை ஸாஹிறா கல்லூரி வீதியில் பிரபல பாடசாலைகளான கல்முனை ஸாஹிறா கல்லூரி மற்றும் கல்முனை மஹ்மூத் மகளிர் என்பன அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

 • maagim Friday, 30 September 2011 06:51 PM

  @ummpah, yes your correct. Many roads have constructed in improper way in these areas. Especially the roads constructed under Samurdhi facing such problems in these areas. Dewller facing problems during flood time. Ministers and higher authorities should concern in this matter. Thanks to honourable minister for attention on roads.

  Reply : 0       0

  pasha Wednesday, 28 September 2011 09:14 PM

  சாஹிரா பழைய மாணவர் சார்பாக எமது நன்றிகள்.

  Reply : 0       0

  sabras Wednesday, 28 September 2011 10:48 PM

  நிச்சயமாக நாங்கள் அனைவரும் பாராட்ட வேண்டும் ஏன் என்றால் பல தடவைகள் பலர் முயன்றும் எவராலும் சாத்தியப்படாதது இப்பொழுது சாத்தியப்பட்டு விட்டது .........பார்ப்போம் முழுமையாக நிறைவடையுமா என்று .!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  Reply : 0       0

  meenavan Wednesday, 28 September 2011 11:22 PM

  4 கோடி ரூபா செலவில் புனர் நிர்மாணம் செய்யும் வீதியின் வடிகான் நேர்த்தியாக அமையாவிட்டால் புனர்நிர்மான பலன் பூரணமாக கிடைக்காது. உரிய அதிகாரிகளின் அதிக சிரத்தை அவசியம். உலக வங்கி நிதி ஒதுக்கலில் மாகான அமைச்சினால் கல்முனை தொகுதியில் நிகழும் வீதி அபிவிருத்தி பாராட்டத்தக்கது. நமது எம்.பி. என்ன சொல்வாரோ? யார் குற்றினாலும் அரிசியானால் மக்கள் மகிழ்வர். அமைச்சருக்கு நன்றிகள்.

  Reply : 0       0

  ziyath Thursday, 29 September 2011 02:41 AM

  வாழ்த்துக்கள்.

  Reply : 0       0

  rozan Thursday, 29 September 2011 04:58 AM

  இவர் தேர்தல் முடிந்தால் கொட்டிய கல்லுகளை அள்ளிச் சென்று விடுவார்.....

  Reply : 0       0

  ummpa Thursday, 29 September 2011 02:24 PM

  வீதி அமையுங்கள். வீதி கட்டாயம் ஒரு மட்டம் மட்டும் தான் இருக்கவேண்டும். எனவே என்த்ரிமார்கள் உடன் பக்கத்தில் இருக்கும் வீடுகளின் வளவு மட்டத்தினை கவனத்தில் எடுத்து வீதி அமைக்கவும். இல்லாவிட்டால் வளவுக்குள்தான் முளுவீதி தண்ணீரும் போய்விடும். எனவே ஒரு அடி ஆழம் தோண்டி வீதி அமைதல் அவசியமென நினைக்கிறேன். வீதியில் வசிப்பவர்கள் இதனை கவனத்தில் கொள்ளவும் .

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .