2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

பிரசாரத்தில் ஈடுபட்டவர்கள்மீது பொலிஸார் தாக்குதல்

A.P.Mathan   / 2011 ஒக்டோபர் 05 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

வேட்பாளர் நிஸாம் காரியப்பர் தலைமையில் சென்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரசார ஊர்வலம் கல்முனை பொலிஸாரினால் தடுத்து நிறுத்தப்பட்டதுடன் ஊர்வலமாகச் சென்ற சிலரும் தாக்கப்பட்டனர்.

கல்முனை மாநகர சபை தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் இணைந்து மேற்கொண்ட பிரசார ஊர்வலமானது இன்று புதன்கிழமை மதியம் கல்முனை பிரதான வீதியின் பொலிஸ் நிலையத்திற்கு அன்மையில் பொலிஸாரினால் தடுத்து நிறுத்தப்பட்டதுடன் அதில் கலந்துகொண்ட சில இளைஞர்களையும் பொலிஸார் தாக்கியுள்ளனர்.

இந்நிகழ்வு தொடர்பாக கல்முனை பொலிஸார் கருத்து தெரிவிக்கையில்:

'குறிப்பிட்ட பிரசார குழுவினர் தேர்தல் சட்டதிட்டங்களுக்கு புறம்பாக ஊர்வலம் மேற்கொண்டதுடன் வீதி போக்குவரத்துக்கு தடையாக நடந்;து கொண்டதனால் ஊர்வலத்தை இடைநிறுத்துமாறு கோரினோம்' என தெரிவித்தனர்.


  Comments - 0

 • siraj Thursday, 06 October 2011 05:28 AM

  எல்லாம் உங்கட கையில் அல்லவா செய்யுங்கள். எதுவரையும் என்று பார்ப்போம்.

  Reply : 0       0

  jazi Wednesday, 05 October 2011 09:41 PM

  நாட்டுல சட்ட ஒழுங்கு சீரா இருக்கு ....... .. .. .. ..

  Reply : 0       0

  Nafeel Wednesday, 05 October 2011 09:46 PM

  நாடு முழுக்க தேர்தல் சட்டத்துக்கு அமைவாத்தான் நடக்கிறாங்க. உள்காய்ச்சல் இப்போதே ஆரம்பம் சிலருக்கு.

  Reply : 0       0

  uooran Wednesday, 05 October 2011 10:21 PM

  போலீசுக்கு நிசாமுட ஊர்வலத்த பொறுக்க முடியல்லையா, இல்ல கல்முன தம்பிக்கு பொறுக்க முடியல்லியா? ஏதோ இங்க தொக்கி நிக்கி பாருங்க.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--