2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதியோர வடிகான் நிர்மாண பணிகள் ஆரம்பம்

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 07 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதியோரங்களில் இடைநடுவில் கைவிடப்பட்டிருந்த வடிகான் நிர்மாண வேலைகள், வீதி அபிவிருத்தி அதிகாரசபையினரால் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இப்பிரதேசத்தில் முன்னர் - வடிகான்கள் உரிய முறையிலும் தொடர்ச்சியாகவும் அமைக்கப்படாமல், அங்குமிங்குமாக துண்டு துண்டாய், கொத்தும் குறையுமாய் அமைக்கப்பட்டமை குறித்து, இப்பிரதேச மக்கள் பல்வேறு தடவை தமது அதிருப்தியினை உயர் அதிகாரிகளிடமும், ஊடகங்களிடமும் தெரிவித்திருந்தனர்.

ஆயினும் சில காலமாக குறித்த வடிகான் நிர்மாண வேலைகள் முற்றாக இடைநிறுத்தப் பட்டிருந்தன. இந்த நிலையிலேயே, தற்போது அட்டாளைச்சேனை பிரதேசத்தின் பிரதான வீதிகளின் இருபக்கங்களிலும் வடிகான்களை அமைக்கும் வேலைத்திட்டம் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இப்பிரதேசத்தில் வடிகான்கள் முறையாகவும், முழுமையாகவும் நிர்மாணிக்கப்படாமையால் கடந்த வெள்ளத்தின் போது - இங்குள்ள மக்கள் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறிருப்பினும், எதிர்வரும் மாரி காலத்துக்கு முன்பதாக - இப்பகுதியின் வடிகான் நிர்மாண வேலைகள் முழுமையாக நிறைவேற்றப்படும் என இப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--