2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

மொழி உரிமைகளை மேம்படுத்தல் தொடர்பான அரச அதிகாரிகளுக்கான செயலமர்வு

Kogilavani   / 2011 நவம்பர் 15 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

சிறுபான்மை மக்களின் மொழி உரிமைகளை உறுதிப்படுத்தல், மேம்படுத்தல், வலுவூட்டுதல் தொடர்பான அரச அதிகாரிகளுக்கான ஒரு நாள் செயலமர்வு அம்பாரை மொன்டி சுற்றுலா விடுதியில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாற்று கொள்கைக்கான நிலையத்தின் அனுசரனையுடன்; தேசிய மீனவர் பேரவையின் அம்பாரை மாவட்ட அலுவலகம், அம்பாரை மாவட்ட கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில்  மாற்றுக் கொள்கைக்கான நிலையத்தின் இணைப்பாளர் லயனல் குருகே தலைமையில் இச்செயலமர்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் வளவாளர்களாக பேராதனை பல்கலைக்கழகத்தின் அரசறிவியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி என்.பி.எம.;சயீப்தீன், சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.ஜீ. புஞ்சிஹேவா, அம்பாரை மாவட்ட செயலக தேசிய மொழிகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.எம்.நிசார்,  தேசிய மீனவர் பேரவையின் அம்பாரை மாவட்ட இணைப்பாளர் ஸஹீறா உட்பட பல் துறைசார் அரச உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

 

 


  Comments - 0

  • ansar Thursday, 08 December 2011 01:37 PM

    திஸ் இஸ் எ குட் ஐடியா போர் எஸ்டாபிளிஷிங் மைனோரிட்டிஸ் லாங்குவேஜ் ரைட்ஸ்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X