2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

நிந்தவூர் ஆயுர்வேத வைத்தியசாலையில் நீரிழிவு நோய்க்கான இலவச சிகிச்சை

Menaka Mookandi   / 2011 நவம்பர் 15 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ ஆணையாளரின் ஆலோசனைக்கிணங்க சர்வதேச நீரிழிவு தினத்தினையொட்டி நிந்தவூர் ஆயுர்வேத வைத்தியசாலையில் இன்று நீரிழிவு நோய்க்கான இலவச வைத்திய ஆலோசனை, மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டன.

நிந்தவூர் ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்தியப் பொறுப்பதிகாரி டொக்டர் கே.எல்.எம். நக்பர் தலைமையில் இடம்பெற்ற இந்த வைத்திய சேவையில், தெரிவு செய்யப்பட்ட 100 நீரிழிவு நோயாளர்களுக்கு - நீரிவு நோய் பற்றிய தகவல் குறிப்பேடுகள், விரிவுரைகள் மற்றும் விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டதோடு, அவர்களுக்கான மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டன.

ஆயுள்வேத வைத்தியசாலையொன்றில் இந்த வருடத்துக்கான சர்வதேச நீரிழிவு தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் இவ்வாறான மருத்துவ சேவைகள் வழங்குவது இதுவே முதல் முறை என வைத்தியசாலையின் வைத்தியப் பொறுப்பதிகாரி டொக்டர் கே.எல்.எம். நக்பர் இதன்போது தெரிவித்தார்.

மேற்படி சிகிச்சையினைப் பெற்றுக்கொண்ட நீரிழிவு நோயாளர்களை முறையாகப் பராமரிக்கும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் இவர்களுக்கு - இதே போன்ற மருத்துவ சேவைகளை நிந்தவூர் ஆயர்வேத வைத்தியசாலை மூலம் தாம் தொடர்ந்தும் வழங்கவுள்ளதாக வைத்தியப் பொறுப்பதிகாரி மேலும் கூறினார்.

நீரிழிவு நோய்க்கான மேற்படி வைத்திய சேவையில், சமூக மருத்துவ உத்தியோகத்தர் டாக்டர் ஜே.யூசுப், வைத்திய அதிகாதி டொக்டர் பி.எம். சுஹைப்தீன், டொக்டர் ஹிமாசி விஜேசேகர மற்றும் டொக்டர் ஜி.ஜி.காஞ்சனா ஆகியோர் கலந்து கொண்டு - நோயாளர்களுக்கான சேவைகளை வழங்கினர்.


  Comments - 0

 • pasha Thursday, 17 November 2011 02:39 PM

  எனது கருத்து உண்மை என்பது தம்பி சொன்ன கொமென்ட் இல் இருந்து தெரிகிறது. எனது கொமென்ட் ஒண்ணுக்கும் உதவாதது என்று மற்றுமொருவர் இங்கு கூறியுள்ளார். உண்மை சொன்னால் சிலருக்கு பிடிப்பதில்லை என்பது இதில் இருந்து விளங்குகின்றது.

  Reply : 0       0

  சிறாஜ் Saturday, 19 November 2011 05:11 AM

  பாசா எனவருக்கு என்ன லூசா

  Reply : 0       0

  pasha Wednesday, 16 November 2011 07:21 PM

  கஞ்சா அபின் பாவித்து மருந்து செய்யும் மருத்துவ துறை இது என்று சொல்கிறார்கள்.

  Reply : 0       0

  தம்பி Wednesday, 16 November 2011 10:04 PM

  Pasha என்பவரே..... சிறுபிள்ளைத்தனமாக (நாகரீகம் கருதி முட்டாள்தனமாக என்று கூறவில்லை) பொதுத் தளமொன்றில் இப்படியெல்லாம் கிறுக்குவதை நிறுத்துங்கள்!!

  கஞ்சா என்பது ஒரு வகையான மூலிகைச் செடி என்பது தெரியுமா உங்களுக்கு??

  அல்கஹோல் என்பது போதைப் பொருள் என்றாலும், அதை - ஆங்கில மருந்துகளில் கலப்பதில்லையா!

  கஞ்சா எனும் மூலிகையில் போதைத் தன்மை இருந்தாலும், அதை அளவாகப் ஆயுள்வேத மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது!

  ஆயுள்வேத மருத்துவம் என்பது உலகின் பண்டைய வைத்திய முறைகளில் ஒன்று! அதை கொச்சைப்படுத்தாதீர்!!

  Reply : 0       0

  தம்பி Wednesday, 16 November 2011 10:05 PM

  Pasha என்பவரே..... சிறுபிள்ளைத்தனமாக (நாகரீகம் கருதி முட்டாள்தனமாக என்று கூறவில்லை) பொதுத் தளமொன்றில் இப்படியெல்லாம் கிறுக்குவதை நிறுத்துங்கள்!!

  கஞ்சா என்பது ஒரு வகையான மூலிகைச் செடி என்பது தெரியுமா உங்களுக்கு??

  அல்கஹோல் என்பது போதைப் பொருள் என்றாலும், அதை - ஆங்கில மருந்துகளில் கலப்பதில்லையா!

  கஞ்சா எனும் மூலிகையில் போதைத் தன்மை இருந்தாலும், அது அளவாக ஆயுள்வேத மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது!

  ஆயுள்வேத மருத்துவம் என்பது உலகின் பண்டைய வைத்திய முறைகளில் ஒன்று! அதை கொச்சைப்படுத்தாதீர்!!

  Reply : 0       0

  jes Thursday, 17 November 2011 12:49 AM

  கொமன்ட் எழுத தகுதி வேண்டும், பாஷா போன்றவர்களின் ஒண்டுக்குமுதவாத கமெண்ட்களை அட்மின் தவிக்க வேண்டும். ஆயுர்வேதம் யூனானி மருத்துவமே நீடித்து நிலைக்கும்.

  Reply : 0       0

  அதிரடி Tuesday, 22 November 2011 03:56 PM

  @ Paasha உங்களுக்கு எது சொந்த ஊரு.. வாயை கொஞ்சம் கொன்ட்றோல் பண்ணிக்கொண்டால் நல்லம்... Keep your mouth please

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X